கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிக்கை. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான வேட்டி-சேலை வழங்கும் திட்டம் ஆகிய அரசுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, நெசவாளர் சங்கங்களுக்கு சந்தைப்படுத்துவதில் உறுதுணையாக இருந்து கைத்தறி ரங்கங்களை பிரபலப்படுத்துதல். வாடிக்கையாளர்களாக மாறிவரும் இரசனைக்கேற்ப பாரம்பரியம் மற்றும் […]