ராமநாதபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு வங்கியில் நேற்றிரவு பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். மேலும் வங்கியை சில நாட்களாக சந்தேகிக்கப்படும் வகையில் இருவர் நோட்டமிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்ளை நடைபெறாததால், கூட்டுறவு வங்கியில் இருந்த கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள், முக்கிய பத்திரங்கள் தப்பித்தன என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.