முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கை செலுத்தினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் சிரமமின்று வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலை […]
சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச்செயலகத்திலிருந்து தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார். மேலும், நாளடைவில் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 12-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வரும் 12-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.முதலமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம்,அமைச்சர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க […]
இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது.ஆனால்திட்டமிட்டபடி திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள் என்று கூறிய அவர் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் உள்கட்சிப் பிரச்சினைகளின் உச்சாணிக் கொம்பில் இருந்து […]
இன்று தனது 75 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று தனது 75 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாள் கொண்டாடும் வகையாக, பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று பிறந்தநாள் கொண்டாடும் குடியரசு தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், இன்னும் பல ஆண்டுகளுக்கு உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவை […]
நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் நடந்தது. இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் இதுவரை 13 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுக தான் காரணம் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை தேனாம்பேட்டை […]
ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள புதுவலசு எனும் இடத்தில் கடந்த 3- ஆம் தேதி சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் மோகம்புரி, அவருடைய மனைவி திருமதி பொங்கி […]
இன்று முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.இந்நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட […]
பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும். கொரோனா காலத்திலும் நலத்திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைய, குறைய தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது.மாநகராட்சிகளிலும் சிறிய […]
நாகையில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது.துரிதமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இன்று அதிகாலை ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 தமிழ் பக்தர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 குடும்பத்திற்கு தலா 1 […]
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது. இன்று காலை ராமநாதபுரத்தில் புதியதாக மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது ஸ்டாலினுக்கு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், விவசாயிகளை கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம். ஸ்டாலினின் பிரசாரத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக திட்டங்களை பட்டியலிட்டு காண்பித்துள்ளோம். அதிமுக அரசு திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஸ்டாலின் சொல்லட்டும். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தமிழகத்தில் […]
அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.இதன் […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் வாக்களிக்க சிலுவம்பாளையம் வந்து உள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது மனைவி ,மகன் மற்றும் மருமகள் அனைவரும் வாக்களித்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இன்று முதற்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் […]
கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவையில் உள்ள நடூர் பகுதியை நேரில் பார்வையிட்டார்.முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.மேலும் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது.அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம், […]
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலை கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ,4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவையில் உள்ள நடூர் பகுதியை நேரில் பார்வையிட்டு வருகிறார்.இவருடன் […]
தமிழகத்தின் 36 வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை. தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என்று இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் திருப்பத்தூர் ,ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக உருவாக்கப்படுவதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது. இன்று முதலாவதாக திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இதற்கு பின் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கால்நடை நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் தொடக்க விழா நடைபெற்றது.தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு […]
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்க விழா சாமியார்மடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு கள்ளக்குறிச்சியின் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது, அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் கூடவே பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, […]
வருகின்ற 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.இந்த நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 19 -ஆம் தேதி )காலை 11 மணிக்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது .இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது