ஹூட் செயலியில் இணைந்த முதல்வர் அவர்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ஹூட் என்ற செயலி 60 வினாடி அளவு ஆடியோவை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாகவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அவர்கள் தாதா சாகேப் பால்கே […]
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சட்டக்கல்லூரிகளில் வழக்கறிஞர் படிப்பினை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் கிடைக்கும். அதன்பின் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், சட்டபடிப்பை முடித்து அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்ற குறைந்தது […]
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்திருப்பதுதான் தமிழக அரசால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது என்று முக ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் பழனிசாமி பதவியைக் காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமே அவருக்கிருக்கும் ஒரே வழி என்று முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை […]
மத்திய – மாநில அரசுகளே மாணவர்களை கொலை செய்திருக்கின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் உயிரைக் கூட சாக விடமாட்டோம் என்றார்கள் .கொரோனாவினால் 8 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள் லட்சம் பேருக்கு பாதிப்பு – அதிலும் பொய்க்கணக்கு. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா.? அரியலூர் அனிதா, பிரதீபா, மோனிஷா, ரிது ஸ்ரீ வைஷியா, கீர்த்தனா, சுபஸ்ரீ, விக்னேஷ் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் யார் […]
எம்.ஜி.ஆர் சகோதரர் சக்ரபாணியின் மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். சகோதரர் சக்கரபாணியின் மகன் சந்திரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் சக்கரபாணியின் மகன் மறைவு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் சகோதரர் […]
நாளை முதல் 6 நாட்களுக்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு. விழுப்புரம் மாவட்டம் பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிபட்டுவந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து, முதல்வர் பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்துள்ளன. இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சுத்தனூர் […]
தமிழக அரசு வருகிற ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக்கை தமிழகம் முழுவதும் தடை விதித்து முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்க்கு முதலாவதாக பிளாஸ்டிக் வாட்டர்கேன் போன்றவற்றை அழித்து அதற்கு பதிலாக பரிசு கூப்பன் தரும் எந்திரத்தை மிழகத்தின் முக்கிய இடங்களான ரயில் நிலையம் போன்றவற்றில் வைக்கபட்டுள்ள்து. தற்போது நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” எனும் பிரச்சாரத்தில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடுப்பு விளம்பர தூதராக நடிகர் விவேக்கை தமிழக அரசு […]
தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலை என்பது குடும்ப, உடல்நிலை, காதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிகழ்கிறது. காவலர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தற்கொலை தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
உணவு தானிய உற்பத்தியில் தமிழக அரசு சாதனை : “கிருஷி கர்மான் ” விருது பெற்றது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமியிடம் “கிருஷி கர்மான் ” விருதினை அமைச்சர் துரைக்கண்ணு காண்பித்து வாழ்த்து பெற்றார்.
சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.பின்னர் அந்த ரூ.21.97 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் பின்பு செய்தியாளர்களை சந்திப்பின் போது “போக்குவரத்து நெரிசலற்ற மாநகரமாக சேலம் மாநகரம் உருவாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.
டிடிவி தரப்பிலிருந்து ஆளுநருக்கு செங்கோட்டையனை தமிழிக முதலைவராக்க கோரி மனு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு யாரை..? முதல்வராக்க வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு டிடிவி தரப்பிலிருந்து செங்கோகோட்டையனை முதல்வராக்க கேட்டுக்கொண்டதாக பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளில் போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தின் நிலுவை தொகை கொடுக்க வேண்டுமென்பதும் ஒன்று. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். விதி எண் […]
மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த நிகழ்ச்சியை மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைத்தனர் இதில் 500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 1 கோடி 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார். 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத்துண்டு ஆகியவை இந்த பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய […]
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த மருத்துவர்கள் 105 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று உள்ளவர்களை விடுவிக்க சிறைத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.
சென்னை ; நந்தம்பாக்கத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் “இந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு மதசார்பற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது எனவும் கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அதிமுக அரசு என்றும் உதவியாக இருக்கும் எனவும்” என முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.நிவாரண பணிக்கு ₹747 கோடி, சீரமைப்பு பணிக்கு ₹5,255 கோடி வழங்க கோரிக்கை வைத்தோம்.அரசு அளித்த கோரிக்கையை பரிசீலித்து மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறினார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஓகி புயலால் பாதித்த தமிழகத்திற்கு 2ம் கட்டமாக ₹561 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.அதேபோல் கேரள மாநிலத்திற்கும் 2-ம் கட்டமாக ₹513 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு. source:dinasuvadu.com
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் மருத்துவமனை ஆகும். இங்கு சுமார் 24 கிராம மக்களின் மருத்துவ சேவை மையமாக உள்ளது சுமார் 50 வருடங்களாக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த மருத்துவ மனைகளின் காட்சிகள் மாறுவதில்லை. இந்த மருத்துவ மனையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் பழடைந்து நிலையில் காணப்படுகின்றன. உள்ளிருக்கும் இரும்பு மற்றும் சிமெண்ட் செகில்கள் கீழே விழும் நிலையில் ஆபாய காட்சியாகவே காணப்படுகின்றன. இவற்றை மறு சீரமைப்பு செய்யும் […]