தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் (மு.க.ஸ்டாலின்) சொல்கிறார். அதனை தமிழக முதல்வர் செய்கிறார்.! – உதயநிதி ஸ்டாலின் டீவீட். தமிழகத்தில் நேற்று ஊரடங்கு தளர்வு நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதில் மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தான பேருந்துகளை இயக்குவது, இ-பாஸ் தமிழகத்திற்குள் செல்ல தேவையில்லை என்பது, உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘ […]
நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்த இலவச கையேட்டை http://www.ammakalviyagam.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அம்மா கல்வியகம் சார்பில், நீட் போட்டித்தேர்வுக்கான இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கல்லீரல் நோய் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட முதல்வர் பேசுகையில், “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்றது மிகவும் பெருமையளிக்கக் கூடியது. இங்கு தரமான சுகாதார சேவை வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறை நிர்ணயித்த இலக்குகளை, வெகு சீக்கிரமே அடைந்துவிட்டோம். உடலுறுப்பு தானத்திற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கி, எளிதில் பதிவு செய்து கொள்ளும் முறையை கொண்டு […]
பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “பேருந்துகள் கடும் இழப்பை சந்தித்துள்ளது. பேருந்துகள் மக்களுடையது, இதை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்ற மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவு என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித் துறை […]