சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தோடு, நிவாரணம் பொருட்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.10 லட்சத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் […]
கொரோனா நிவாரண நிதியை தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன ? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.கொரோனா பாதிப்பை அதிகம் இருக்கும் பகுதிகளில் மட்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.இந்த சமயத்தில் கொரோனா தடுப்பிற்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளோர் நிதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பல தரப்பினரும் நிதி வழங்கினர். இதற்குடையில் […]
கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306 ,42,10,558 நிதி பெறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்கள் நிதி வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதேபோல மத்திய அரசு […]
முதல்வர் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி வழங்க உள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.இதேபோல் பிரதமர் மோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி பல தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ. 1 கோடி வழங்க உள்ளதாக […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியினை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து பலர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரணம் நிதியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.70 கோடி கொரோனா நிவாரண […]