திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 6 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் நிவாரண நிதி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த உறவுகளை இழந்து, வீடு உடைமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை […]