தமிழகத்தில் நிலுவையில் உள்ள 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் […]
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்ற உள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சற்று நேரத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்ற உள்ளார். அந்த உரையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளியானது.
நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்தினார். இதையெடுத்து நள்ளிரவு 12 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் ஏற்கனவே 144 தடை ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களிடம் உரையாற்றினார். அதில் தமிழக முதலமைச்சராக […]