புதுச்சேரியில் மழை, வெள்ளம் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வெள்ள காட்சியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விளை நிலங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஹெக்டர் […]