மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு காலமானார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,மேற்கு வங்க அரசின் கேபினட் அமைச்சராகவும், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சுப்ரதா முகர்ஜிக்கு வயது 75.அவருக்கு அக்டோபர் 24 அன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்தும்,நெஞ்சுவலி காரணமாகவும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் ,சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.22 மணியளவில் அவர் காலமானார். […]
வருகின்ற அக்டோபர் 7 -ம் தேதி பவானிபூர் தொகுதி எம்எல்ஏவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். முன்னதாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.ஆனால்,நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா்.இருப்பினும், மேற்கு வங்க முதல்வராக அவா் பதவியேற்றாா்.இதனால்,பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கிடையில்,பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து,பவானிபூர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு,அத்தொகுதியில் முதல்வர் மம்தா […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் அமைதி மாநாட்டில் பங்கேற்க மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சகம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. […]
பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் தான் தோல்வியடையக்கூடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தெரியும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற […]
பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் நாளை வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார். மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து […]
கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததுடன், மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. ஆனால், மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசு அனுமதி […]
மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது . தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான wbbse.org இல் அணுகலாம் அல்லது wbresults.nic.in க்கு பார்க்கலாம். மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை 17 ஆம் தேதி அறிவிக்கபடும். அதேசமயம், WBBSE 10 ஆம் வகுப்பு வாரிய முடிவுகள் நாளை வெளியாகும் என முதல்வர் மம்தா பானர்ஜி […]