என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் – அம்மாநில அரசு முடிவு.!

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவந்த சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனை சில மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றம் செய்துள்ளனர். சிலர் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது எனவும் என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை.! தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் பதவி பறிப்பு.! அதிரடி காட்டிய ஆந்திர முதல்வர்.!

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திராவில் கடந்த வருடம் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி பதவியில் அமர்ந்த நாளிலிருந்து புது புது திட்டங்களை கொண்டுவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு … Read more

திஷா” சட்டம் அமல்படுத்த 2 பெண் அதிகாரிகள் நியமனம்.!

“திஷா” சட்டம் ஆந்திர மாநில சட்டசபையில் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. “திஷா” சட்டத்தின்  சிறப்பு அதிகாரிகளாக கிருத்திகா சுக்லா ஐ.ஏ.எஸ். மற்றும் எம். தீபிகா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த மாதம் 27-ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா  நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறையவும் , … Read more