அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுள்ளார்.சர்மாவுக்கு ஆளுநர் ஜெகதீஷ் முகி உறுதிமொழி வழங்கினார். அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 126 தொகுதிகளில் 75 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.இதனையடுத்து ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சர்பானந்த சோனாவால் ஆகிய இருவரும் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்களாக இருந்தனர்.அதனால்,இந்த இரண்டு பேரில் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர்,நேற்று குவாஹாத்தியில் நடைபெற்ற பாரதிய ஜனதா […]