புயலால் ஏற்பட்டுள்ள மரசேதங்கள் குறித்து முதல்வர் பகிர்ந்துள்ள வீடியோ பதிவில், எல்லாம் முடிந்ததும் மரங்களை நடுங்கள் என கூறியவருக்கு பதிலளித்துள்ளார் முதல்வர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் எனும் புயல் உருவாக்கிக்கொண்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு காரைக்கால் துறைமுகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் அருகில் நெருங்க நெருங்க பல இடங்களில் காற்று மிக அதிகளவில் வீசிக்கொண்டு இருக்கிறது இதனால் மரங்கள் வீடுகள் அனைத்தும் உடைந்து விழுந்துகொண்டுள்ளது. இந்நிலையில் […]
குழந்தையும் தெய்வமும் ஒன்று, குழந்தைகள் தின வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று இந்தியா முழுவதிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வந்தாலும், சுதந்திர போராட்ட வீரர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளும் இன்று தான். இவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று குழந்தைகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். […]
எஞ்சினியரிங் மாணவர்களின் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தினாலே (அரியர்ஸ் உட்பட) பாஸ் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை ஏற்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். […]
சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு கடந்த பல மாதங்களாக போடப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து, தொழில்கள் அனைத்தும் தற்போது அரசு அறிவித்துள்ள சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு […]
அமைச்சர் ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி மரணமடைந்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் . கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஓ. எஸ். மணியன் அவர்களின் மனைவி கலைச்செல்வி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கலைச்செல்விக்கு நேற்று திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து அவரது உடல் சொந்த […]
தமிழக அரசின் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனருக்கும், மாநில இளைஞர் விருதுகள் 3 பேருக்கும் முதல்வர் வழங்கினார். நாடு முழுவதும் கொண்டாடப்படும் 74வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள தலைமை செயலகமான கோட்டையில் உள்ள கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து இந்த விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை […]
விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய காரணங்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிலர் விண்ணப்பித்தும் சில காரணங்களால் அது நிராகரிப்படுவதாக மக்கள் […]