கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் 2 வது முனையம் மே 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேலும்,கொரோனா இரண்டாவது அலை பரவலின் காரணமாக விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் வருகை பெரும் அளவில் குறைந்ததால், விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால்,டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் 2 வது முனையம் மே 17 ஆம் தேதி […]
85% பொறியியல் மாணவர்கள் வேலைக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இ.பாலாகுருசாமி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவரிடம், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிக்கான மவுசு குறைந்ததற்கான கரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்க்கு பதிலளித்த அவர், பொறியியல் கல்லூரி பயின்றுள்ள மாணவர்களில் 85% பேர் வேலை செய்வதற்கு தகுதியுடையவர்களாக இல்லை எனவும், இதனால் தரமற்ற 200 பொறியியல் கல்லூரிகளை மூட […]
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழக அரசு ,முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய நகைக் கடையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 30,000 நகைக்கடைகள் மூடப்படும் என நகை வணிக சங்க தலைவர் ஜெயந்தலால் சலானி கூறியுள்ளார். மக்கள் நலன் கருதி சிறிய நகைக் கடைகளையும் வருகின்ற 31-ம் தேதி வரை மூடப்படும் என நகை வணிக சங்க தலைவர் ஜெயந்தலால் சலானி கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகளவில் 10ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் அசுரவேகத்தில் கொரோனா பரவிவருகிறது. யூகே-வில் இதுவரை 3227 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், அங்குள்ள அனைத்து உணவகங்கள், பப்கள் மூடப்படும் என அதிபர் போரிஸ் ஜான்சன் […]
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து […]
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற குத்துசன்டை போட்டியில் வீரர் ஒருவர் நடுவரை சரமாரியாக குத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்லாந்து நக்கோன் பதாம் என்ற இடத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் வீரர்கள் பங்கேற்ற குத்துசண்டை போட்டி நடந்தது.அப்போது ஒரு வீரர் சக வீரரை விட்டுவிட்டு போட்டியின் நடுவரை சரமாரியாக குத்தியதை கண்டு பார்வையாளர்கள் சரமாரியாக சிரித்தனர்.ஆனலும் அந்த வீரர் நடுவரை தாக்குவதை நிறுத்தவில்லை பின்னர் கண்களை திறந்து பார்த்ததுமே அந்த குறிப்பிட்ட வீரர் நடுவரை தாக்குவதை விட்டு விட்டார். […]