வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். மேலும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கிக் கூறும் வகையில் இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தார். இந்நிலையில், […]
ஆந்திர மாநிலத்தில் 13 சதவிகிதம் மதுக்கடைகளை மூட அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் மே மாத இறுதியில் 13 சதவிகிதம் மதுக்கடைகளை மூட அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அங்கு 20 சதவிகிதம் மதுக்கடைகள் மூடிய நிலையில், தற்போது மேலும் 13 சதவிகிதம் மூட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திராவில் தற்போது 3,469 கடைகள் உள்ள நிலையில், 13 சதவிகிதம் மூடப்பட்டால் 2,934 மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.
மும்பையில் இன்று முதல் மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவதற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைமையாக கொண்ட மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவை பொறுத்தவரை மும்பையில் தான் பாதிப்பு அதிகம். மும்பையில் நேற்று மட்டும் 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 24 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மும்பையில் இதுவரை 9,758 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 387 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக எல்லையில் உள்ள 16 மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனீ, கன்னியாகுமரி, திருப்பூர், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர், கோவை மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். […]
ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். வோடஃபோன் நிறுவனம் 53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய இடத்தில் வெறும் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வந்தது. இந்த நிறுவனம் வந்த பிறகு மற்ற நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது அது மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் சில நிறுவனங்கள் […]
நெய்வேலியில் உள்ள என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிந்ததால், அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனல் மின் நிலையம் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், 2022-ம் ஆண்டுக்குள் படிப்படியாக மூடவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகள் என்பதால் மூட உத்தரவு. இந்த நிலையில் முதலாவது அனல் மின் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது என […]
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 25-ம் தேதி இரவு திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்படும். சூரிய கிரகணத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தேரேசுவரா் கோயில் டிசம்பா் 26-ம் தேதி காலை 6.10 மணி முதல் பகல் வரை நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 25-ம் தேதி புதன்கிழமை இரவு இராக்காலத்தில் திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்படும். பின்னர் சூரிய கிரகணத்தை முன்னிட்டு 26-ம் தேதி […]
பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக டெல்லிக்கு வடக்கே உள்ள பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு விமானங்கள் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.