சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கம் ஏற்படாமல் தற்போது மழை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பழைய படி சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறது. சென்னையில் கனமழை பெய்த போது தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக விரைவாகப் பல இடங்களில் […]
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வம் பெற வேண்டுமெனில் தூய்மை மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தச் சுற்றுப்புறத் தூய்மையை காப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள். தூய்மையே நோயின் மருத்துவம் என்பதால் தூய்மைப் பணியாளர்களின் பணி மிகுந்த முக்கியத்துவம் […]
டெல்லியில் முறையான சம்பளம் மற்றும் பிபிஇ கிட் கேட்டு போராடிய 100 தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்கு பதிவு. டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் பிபிஇ கிட் ஆகியவை முறையாக தருமாறு கேட்டு போராடிய 100 தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய தூய்மை பணியாளர்களில் ஒருவர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும், பாதுகாப்பு கவச உடைகள் வழங்க […]
சென்னை காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கு சிறப்பினமாக ரூ.2,500 மதிப்பூதியம். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33,000 நிரந்திர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை முதல்வர் பழனிசாமி பாராட்டியுள்ளார். அவர்களின் இந்த அறிய சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கு சிறப்பினமாக ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் […]
சென்னை அயனாவரம் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து அனைத்து மாவட்டங்களிலும் பரவியுள்ளது. இதனால் பாதிப்பு தினந்தோறும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் மறுபக்கம் வைரஸில் இருந்து குணமடைந்து வருகிறார்கள். அதன்படி நேற்று மட்டும் புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதுமட்டுமில்லாமல் 94 பேர் குன்னமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 960 பேர் வீடு திரும்பியுள்ளனர். […]
கோவை மாநகராட்சியில், 14 வருடங்களாக குப்பை லாரி டிரைவராகப் பணிபுரிபவர் மணி. நாற்பதுகளை கடந்த வயதுக்காரர். `சென்ற வாரம் குப்பை அள்ளும் இடத்தில், ஒரு பெண்ணுக்கு `லாரியில் அமர்ந்தவாரே பதில் சொன்னார்’ என்ற காரணத்துக்காக.. மணியை செருப்பால் அடுத்திருக்கிறார் அந்தப் பெண்ணின் மகன்’ என்ற தகவலைக் கேட்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. `மணியை சாதிப் பெயரைச் சொல்லி செருப்பால் அடித்து இழிவுப்படுத்தியவரை, கைதுசெய்ய வேண்டும்’ என்று மணியும் அவரோடு பணிபுரியும் சக துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து வழக்கு பதிந்துள்ளனர் நடந்தது […]