கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி […]