மும்பைக்கு உலகிலேயே செல்வ செழிப்பான நகரங்கள் பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. நியூ வேல்ட் வெல்த் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களின் சொத்து மதிப்புக்கள் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, மும்பை நகரம் 950 பில்லியன் டாலர் சொத்து மதிப்புக்களுடன், பிரான்சின் பாரிஸ், கனடாவின் டொரான்டோ நகரங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.