சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மட்டும் போராட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பு உடன்பாடு எட்டினாலும், சிஐடியு தொழிற்சங்கத்தினர் உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். Read more – போராட்ட களத்தில் சாம்சங் ஊழியர்கள்., தற்போதைய நிலவரம் என்ன.? இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது […]
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 25 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று, அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை அடுத்து, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் முதலில் சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு நேற்று […]
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பணிமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது செய்யப்படும் வருகின்றனர். இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது, தமிழக அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அரசுப் பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது, முறையாக பயிற்சி பெறாதவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிதிச்சுமை என்பதை காரணமாக சொல்ல முடியாது. தாங்கள் […]
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைளை முன்வைத்து நாளை (ஜனவரி 9ஆம் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். ஏற்கனவே, கடந்த 3ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 8ஆம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்தையானது சென்னை தேனாம்பேட்டையில் […]
அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றம் அழைப்பு விடுத்துள்ள 2 நாள் பாரத் பந்த் (நாடு தழுவிய வேலைநிறுத்தம்) திங்களன்று வங்கி சேவைகளை பாதித்துள்ளது.நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்களில் ஒரு பகுதியினர் பணிக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) போன்றவை தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களையும் தனியார்மயமாக்கலையும் […]
பட்டாசு உள்ளிட்ட தொழில்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். பட்டாசு, பஞ்சாலை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட தொழில்களை மத்திய அரசு நெருக்கடிக்குள் தள்ளியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். ராமகிருஷ்ணாபுரத்தில் துவங்கிய பேரணி ராஜபாளையம், வெம்பக்கோட்டை வழியாக சிவகாசியை சென்றடைந்தது. பேரணியின்போது மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.சண்முகம், கே.எம்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை நியமிக்க தொழிற்சங்கங்கள் தங்களது தரப்பின் மூலம் கோரிக்கை வைத்துள்ளன.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் நலன் கருதி அண்ணா தொழிற்சங்கம் மூலம் ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வைத்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘அண்ணா தொழிற்சங்கம் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்தால், நெருப்புக்குள் கைவிட்ட குழந்தையின் நிலை தான் ஏற்படும்’ என்று போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். source : dinasuvadu.com