தமிழகத்தில் 13 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கைக்கான அரசாணை வெளியீடு. அறந்தாங்கி, திருச்சி, மயிலாடுதுறை, வெள்ளகோவில், ஆலங்குடி, செந்துறை, முசிறி, காங்கேயம், பெண்ணாடம், செங்கம், புதுவயல், திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்க அரசு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மேல் கச்சிராப்பட்டு – கீழ் கச்சிராப்பட்டு இடையேயும் பைபாஸ் சாலை அமைக்க திட்ட அறிக்கைக்கான அரசாணை அரசு வெளியிட்டது.
இந்தியாவில் இருக்கும் நகரங்களில் தரமான வாழ்க்கைக்கான நகரத்தில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வாழ தகுதி வாய்ந்த நகரங்களை டெல்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் வெளியிட்டுள்ளது. இதன் தரவரிசையில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. மேலும், தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஆய்வு முடிவில் இந்தியாவில் வாழத்தகுதி வாய்ந்த 10 நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனை வாழ்க்கை தரம்(35 புள்ளிகள்), பொருளாதார திறன்(15 புள்ளிகள்), நிலைத்தன்மை(20 புள்ளிகள்) மற்றும் மக்களின் […]