குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத்திருவிழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தம்பையா ஓதுவாரின் திருமறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு கொடிப்பட்டத்தை மேளதாளத்துடன் ரதவீதிகள் வழியே கொண்டுசென்றனர். 8.25 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. தெற்குமண் மடம் ஆதிஷேசன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். பின்னர் […]
தமிழ்ப்புத்தாண்டு என்பது ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. ஏன் சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாகக் குறிப்பிடுகிறார்கள் என்பது பற்றியும், சித்திரை மாதத்துக்கான சிறப்புகள் பற்றி ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும்.அதனால்தான் நாம் சித்திரை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். பிரம்மதேவர் உலகைப் படைத்தது சித்திரை முதல் நாளில் என்கின்றன சில ஞான நூல்கள். இத்தினத்தில் திறந்த வெளியில் சூரிய பகவானுக்குப் பூஜைகள் செய்வார்கள். தமிழகத்தில் […]