கோவை மாவட்டம் பெரியநாயக்கன் -பாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிரஸ்காலனி பகுதியில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து அச்சக ஊழியர்கள், மற்றும் அரசியல் கட்சியினர் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கட்ட போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அச்சகத்தை மூட எதிர்ப்புத் தெரிவித்து, பெரியநாயக்கன்பாளையம், பிரிக்கால் பிரிவு, வண்ணாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள […]