தென் கொரியா முன்னாள் குடியரசுத் தலைவர் சுன் டூ-ஹ்வான் காலமானார். தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சுன் டூ ஹ்வான்,இன்று சியோலில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று அவரது உதவியாளர்களை மேற்கோள் காட்டி யோன்ஹாப்(Yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவருக்கு வயது 90. தென் கொரியாவில் 1979 இல் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றி 1988 வரை பதவி வகித்தவர் சுன் டூ ஹ்வான்.அதன்பின்னர், ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் தேசத்துரோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் […]