கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு, ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் முதலமைச்சர் வாழ்த்து. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு, ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக அனபை பரிமாறி உதவும் திருநாள். தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக் கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசு என கூறியுள்ளார். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக […]