நடிகர் விஜய் தேவரகொண்டா வருடம் வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஏதாவது பரிசு அளிக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். தனது கடைசிப் பெயரிலிருந்து தேவரவையும், சாண்டா கிளாஸில் இருந்து சாண்டாவையும் இணைத்து, சில வருடங்களுக்கு முன்பு ‘தேவராசாந்தா’ என்ற பாரம்பரியத்தைத் தொடங்கினனார். (#தேவரசந்தா) அதன்மூலம், விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் அற்புதமான பரிசுகளுடன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு #Deverasanta2022 திட்டம் பெரியதாக உள்ளது, ஏனெனில் […]
தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக கொடாடப்பட்டு வருகிறது. கொரோனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சாகமற்று இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்தாண்டு வெகு சிறப்பாக கொட்டப்பட்டு வருகிறது.நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று […]
ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம். புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வர் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். முதலில் […]
அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தற்போது ‘பாம்ப்’ புயலால் மக்கள் வெளியில் வர முடியாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை வீடுகளிலேயே கழிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பெரும்பாலான மக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாமல் ‘பாம்ப்’ புயலால் (Bomb Cyclone) தவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து உறைபனி கொட்டி வருகிறது. அமெரிக்காவின் மேற்கு மாநிலமான மொன்டானாவில் நேற்று (வெள்ளி) வெப்பநிலை -45°C என பதிவானது. அதே போல , மத்திய மாநிலங்களின் வெப்பநிலையும் […]
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரம் ஏன் வைக்கப்படுகிறது என்று இந்த சிறு குறிப்பில் நாம் பார்க்கலாம். கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த குடில் அமைக்கப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து ஏழை வீட்டு குடிசை தொழுவத்தில் தான் பிறந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதனை குறிப்பிடும் வகையில் தான் இந்த குடில் அமைக்கப்படுகிறது என்பதும் […]
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, உலகெங்கும் உள்ள பில்லியன் கணக்கான மக்களால் கிறிஸ்துமஸ் தினமாக, மத மற்றும் கலாச்சாரம் தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தை இயேசு பிறந்த இடம்: […]