எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு […]
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனான இன்று தொடங்கியது.பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனான இன்று தொடங்கியது.இதனை முன்னிட்டு,நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதே சமயம்,சாம்பல் புதனை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்ற நிலையில்,இதில் கலந்து கொண்ட ஏராளமான கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் கொண்டு சிலுவை குறியிட்டு பூசினர். பொதுவாக,இயேசு […]
லால்குடி:கடந்த 13ம்தேதி லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்பெருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இயேசுவின் புதுமைகளான, தூய அன்பும் நட்பும், இறைவேண்டலில் தாழ்ச்சி, கடவுள் பிரிவு, பாவ மன்னிப்பும் நம்பிக்கையும், என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை தொடர்ந்து அன்னையின் ஆடம்பர சப்பரபவனி இரவு 10 மணிக்கு அடைக்கல நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு பெரிய தேர் வீதி உலா வந்தது. இதில் சுற்றுப்பகுதிளில் இருந்து அனைத்து பகுதி […]
மதுரை-அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி, சதங்கை கலை மையம் அருகிலுள்ள சர்ச் மற்றும் கூடல்புதூர் பகுதியிலுள்ள இரண்டு சர்ச் களுக்கு ஞாயிறன்று ஐம்பது பேர் கொண்ட இந்துத்துவ வெறிக்கும்பல் ஒன்று சென்றுள்ளது. இனிமேல் நீங்கள் யாரும்சர்ச் நடத்தக்கூடாது. அடுத்த வாரம் சர்ச் நடத்தினால் உங்களை எல்லாம் இங்கிருந்து விரட்டியடிப்போம் என அந்தக்கும்பலில் இருந்தவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோவில் தெரு பகுதியில் சர்ச் நடத்தி வரும் ரவிஜேக்கப் என்பவர் கூறுகையில், ஞாயிறு […]