இன்று 40 ஆவது உலகக்கோப்பை லீக் போட்டியில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் இறங்கிய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். இதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும், தொடக்க வீரர் டேவிட் மாலன் […]