மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்-மே) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று (ஏப்ரல் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று காலை 9:55 முதல் 10:19 மணிக்குள், சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரம் […]