பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சின்னசாமி மைதானத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகப் போட்டி தொடங்குவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய மண்ணில் மட்டும் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மொத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில், 17 முறை இந்திய அணி வெற்றிப் பெற்றிருக்கிறது. 2 போட்டிகளை மட்டுமே நியூஸிலாந்து அணி வெற்றிப் பெற்றிருக்கிறது. […]