கிழக்கு சீனாவில் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவராகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பலர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்த ஹோட்டல் திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அவரசநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 மாடி கொண்ட சின்ஜியா ஹோட்டலில் சில புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஹோட்டலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 58 பேர் தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடிப்பாடில் சிக்கி […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் சீனாவை மிரட்டி வருகிறது. உலக முழுவதும் இந்த வைரசால் இதுவரை 3,272 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலும் சீனாவை சேர்த்தவர்கள். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,900-ஐ எட்டியுள்ளது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் சீனாவை சேர்த்தவர்கள் என தகவல். இந்த வைரஸ் சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில் பரவி வருகிறது. […]
சீனாவில் இருந்து திரும்பிய அறந்தாங்கியை சேர்ந்த நபர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா வைரசால் தான் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கும் என்று மக்கள் மத்தியில் அச்சம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சக்திகுமார் என்பவர் கடந்த 4-ம் தேதி சீனாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 14-ம் தேதி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் […]
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து, கொண்டே வருகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாகியுள்ளது. இதிலிருந்து பாதுகாக்க மருத்துவர்கள் கடும் முயற்சி செய்து வருகிறார்கள். சீனாவில் இரவு , பகலாக மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை காக்கும் மருத்துவர்கள் தூங்குவதற்கு நேரம் இல்லாமல் கிடைத்த நேரத்தில் தூங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற பல நகரங்களிலும் […]
சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 170 பேர் உயிரிழந்தும், 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இதற்கு சீனா உள்ளிட்ட பல்வேறு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதியை, அலிபாபா நிறுவனத்தின், நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது புதியதாக கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் […]