அருணாச்சல பிரதேசத்தில் எல்லை அருகே இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்ஏசி எனும் உண்மையான கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 300 சீன வீரர்கள் இந்திய எல்லையில் நுழைந்ததாகவும், இந்திய ராணுவம் தயாராக இருந்ததால் இந்த தாக்குதலை சமாளிக்க […]