கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அதிபர் டிரம்ப், “பயங்கரமான சீனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்போம்” என தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், 4 நாட்களுக்கு பின் கடந்த திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். […]