சீனாவின் பொருளாதாரச் சாலைத் திட்டம் : இந்தியா மறுப்பு..!
பல நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதாரச் சாலைத் திட்டம் குறித்த தீர்மானத்தில் கையொப்பமிட இந்தியா மறுத்துவிட்டது. சீனா, மங்கோலியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையையும், அதன் ஓரத்தில் தொழில் மண்டலங்களையும் அமைக்கச் சீனா திட்டமிட்டு வருகிறது. கடந்த இரு நாட்களாகக் கிங்டாவோ நகரில் சாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்ற நிலையில், அதன் நிறைவில் சீனாவின் சாலைத் திட்டம் குறித்த தீர்மானத்துக்கு உறுப்புநாடுகளின் ஒப்புதல் கோரப்பட்டது. 17பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்மானத்தில் சீனா, கசகஸ்தான், […]