நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவை இந்தியா அதிகம் நம்பியிருப்பதைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும் உதவும் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை என தெரிவித்துள்ளார். களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நம்மால் செய்ய முடியாத சூழ்நிலை ஏன் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள சீதாராமன், […]
டெல்லியில் உள்ள உணவகங்களில் சீன பொருட்கள் பயன்படுத்தப்படமாட்டது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சீனாவிற்கு எதிராக இந்திய மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனால், சீன பொருட்களை புறக்கணிக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள உணவகங்களில் சீன பொருட்கள் பயன்படுத்தப்படமாட்டது என டெல்லி தங்கும் விடுதி மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், ஓட்டல்களில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு அறை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.