நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில் தான் நடந்துள்ளது இந்த வினோதமான கொள்ளை முயற்சி. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், ஏடிஎம் அறைக்குள் ஒரு நபர் நுழைகிறார். அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை பார்க்கும் வேளையில் கதவு தானாக சாத்திக் கொள்கிறது. இதையடுத்து அங்கு உள்ள எச்சரிக்கை மணி சப்தமாக ஒலிக்கிறது. இதனால் பதட்டம் அடையும் அந்த நபர் கீழே இருக்கும் ஒரு தகரத்தை எடுத்து கதவை உடைக்க முயற்சி செய்கிறார். […]