இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவிழும் சீன செயலிகளை தடை செய்வதற்கான ஆலோசனை நடந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட […]
மொபைல் போன்களிலிருந்து சீன பயன்பாடுகளை நீக்குபவர்களுக்கு இலவச முகமூடி. கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில், சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, உத்திர பிரதேசத்தில், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தங்கள் மொபைல் போன்களில் இருந்து சீன பயன்பாடுகளை நீக்கும் அனைவருக்கும் […]
இணையத்தில் ட்ரெண்டாகும் #RIPtiktok ஹேஸ்டேக். கடந்த, 15ம் தேதி, காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, மத்திய அரசு, சீன செயலிகளுக்கு தடை விதித்ததையடுத்து, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. […]