சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள் என்கிறார் ஜவஹர்லால் நேரு.. தேசத்தின் வளர்ச்சிக்கு குழந்தைகள் விதையாக நடப்படுகின்றனர். ஏனென்றால் பிற்காலத்தில் அவர்கள் தான் நாட்டின் தலைவர்களாக உருவெடுக்கின்றனர். குழந்தைகள் தினம்; 1856 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சார்லஸ் லியோனட் என்ற பாதிரியாரால் குழந்தைகள் தினம் தொடங்கப்பட்டது .இந்த நாள் பூக்கள் ஞாயிறு என்று கூறப்பட்டு வந்தது .பின்பு குழந்தைகள் நாள் என […]
இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழக அரசு சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கும் கேடயம், பரிசுகள் வழங்ப்பட்டன இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். கனமழை எதிரொலி..! 8 மாவட்டங்களில் பள்ளி […]
குழந்தைகளை கொண்டாடும் வகையில் நாம் கொண்டாடக்கூடிய ஒரு தினம் தான் குழந்தைகள் தினம். இந்தியா முழுவதும் நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் உருவான வரலாறு ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், நவம்பர் 20ம் தேதி முதலில் குழந்தைகள் தினம் கொண்டாடடப்பட்டது. அதன்பின் ஜவஹர்லால் நேருவின் மறைவையடுத்து, 1964ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம், நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் […]
இளம் சிறார்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. நாடு முழுவதும் நவ14ம் தேதி இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், குழந்தைகள் ஒரு நாட்டின் செல்வம் என்று குழந்தைகள் தின வாழ்த்துக்கள் தெரிவித்து முதலமைச்சர் முக ஸ்டலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நிளைவாகவும், குழந்தைகள் அவர் மீது […]
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14 ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 134வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]
கனிமொழி எம்.பி அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று நாடு முழுவதும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் , ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘இந்த நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடத்தில் என்று சொன்ன இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருஅவர்களின் பிறந்தநாளே குழந்தைகள் தினம். இந்நாளில் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் ஒழித்து அவர்களுக்குப் […]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கைபேசி அடிமைகளாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கைபேசியுடன் செலவிடும் நேரத்தை இன்று குடும்பத்துடன் செலவிடுவதில்லை. இந்நிலையில், நவ.14 குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் அனைவரும் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை தங்கள் செல்போனை அணைத்து வைத்துவிட்டு, குழந்தைகளுடன் நேரத்தை செலவளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவழிக்க வேண்டும். 1 மணி நேரம் […]