ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பாராயன் நடிப்பில், குழந்தைகளான கீதா, ‘பசங்க 2’ புகழ் நிஷேஷ், வைஷ்ணவி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சங்குசக்கரம்’. அறிமுக இயக்குநர் மாரிசன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக இருந்தாராம். ஷபிர் இசையமைத்துள்ள ‘சினிமாவாலா பிக்சர்ஸ்’ கே.சதீஷ் மற்றும் ‘லியோ விஷன்’ வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளனர். குழந்தைகளுக்கான ஹாரர் காமெடி ஜானரைக் கொண்ட இப்படத்தை வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.