திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 13) திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் உற்சவ நிகழ்வான தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வானது இன்று மாலை நடைபெற உள்ளது. அதற்கான கொப்பரை தீப மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை காண மலைமீது எற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், மலை அடிவாரத்தில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் வரையில் பக்தர்கல் திருவண்ணாமலைக்கு தற்போது வரையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக […]