தமிழகம் ஏழ்மையில் தகிப்பதன் அடையாளம்தான் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் […]