புதுக்கோட்டையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். புதுக்கோட்டை அருகே உள்ள குடுமியான்மலை எனும் பகுதியில் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த காப்பகத்தில் குழந்தைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதாகவும், ஆனால் இந்த பணத்தை பெற்றுக்கொண்ட காப்பக உரிமையாளர்கள் குழந்தைகளை முறையாக பராமரிக்கவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த காப்பகத்தை நடத்தி வந்த அரசு பள்ளி ஆசிரியை கலைமகள் மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் […]