கடலை பருப்பு சாப்பிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். சில கடினமான பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே உள்ளது செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷனா கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வீட்டிலிருந்த கடலைப் பருப்பை எடுத்து சாப்பிட்டுள்ளார். […]