Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர் பகுதியில் இன்று காலை வெள்ளிக்கிழமை (மே3) ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சாலையில் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த சமயத்தில் கீழே இருந்த பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது பச்சிளம் குழந்தையின் உடல் அதில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அதிர்ச்சி அடைந்த […]
Chennai : அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய குழந்தையைப் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயின் பூம்பொழி நகரில் அமைந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கீழே இருந்த தகர சீட்டில் விழுந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது. அந்த குழந்தை தகர சீட்டில் கீழே […]
குழந்தைகளை கொண்டாடும் வகையில் நாம் கொண்டாடக்கூடிய ஒரு தினம் தான் குழந்தைகள் தினம். இந்தியா முழுவதும் நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் உருவான வரலாறு ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், நவம்பர் 20ம் தேதி முதலில் குழந்தைகள் தினம் கொண்டாடடப்பட்டது. அதன்பின் ஜவஹர்லால் நேருவின் மறைவையடுத்து, 1964ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம், நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் […]
கன்னியாகுமரி மாவட்டம், மணவாள புரத்தை சேர்ந்த தம்பதியினர் முத்துராஜ்-ரதி இவர்களுக்கு மூன்று குழந்தை உள்ளனர். அதில் மூன்றாவது குழந்தை ஸ்ரீ ஹரிஷ். இந்த குழந்தைக்கு 2 வயது ஆகிறது. இந்த நிலையில், முத்து ராஜ், அவரது மனைவி மற்றும் அவரது மூன்றாவது குழந்தை மூன்று பேரும் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போடுவதாக வேண்டி மாலை அணிவித்து விரதம் இருப்பதற்காக வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர்களிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். […]
குழந்தையின் இயற்கையான பாதுகாவலராக இருக்கும் தாய்க்கு குடும்பப் பெயரைத் தீர்மானிக்க உரிமை உண்டு. மறு திருமணத்திற்கு பிறகு, மறைந்த கணவரிடமிருந்து பிறந்த தனது மகனின் குடும்பப் பெயரை (Surname) மாற்றும் ஆந்திரப் பெண்ணின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதாவது, முதல் கணவரின் மறைவுக்குப் பிறகு, குழந்தையின் ஒரே இயற்கையான பாதுகாவலராக இருந்ததால், தாய் தனது புதிய குடும்பத்தில் குழந்தையைச் சேர்ப்பதிலிருந்தும், குழந்தையின் குடும்பப்பெயரைத் தீர்மானிப்பதிலிருந்தும் எவ்வாறு சட்டப்பூர்வமாகத் தடுக்கப்படுவார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் […]
ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை தமிழக அரசு திரட்ட வேண்டும். மாவட்ட வாரியாக விவரங்களை திரட்டி, 24 மணி நேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல குழந்தைகள், பெற்றோரை இழந்துள்ளனர். இதனையடுத்து, இந்த குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும், அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை வட்டியுடன் அந்த […]
பெற்றோர் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் 3 வயது சிறுமி தனக்கு சளிப்பிடித்த காரணத்தால் தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார். நாகாலாந்து மாநிலத்தில் […]
ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு […]
பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர். தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர் என தெரியவந்துள்ளது. குழந்தைகளிடம் ‘வைரஸ் சுமை’ அதிகம் இருப்பதால்தான் பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரசை வேகமாக பரப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் சுமை என்பது ஒருவரிடம் உள்ள வைரஸின் அளவை குறிக்கிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் குறைவான […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கோமாவில் இருக்கும் பொழுதே குழந்தையை பெற்று தற்போது மூன்று மாதங்களுக்கு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் தனது குழந்தையை அள்ளி அணைக்கும் காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் பகுதியை சேர்ந்த கெல்சி எனும் நிறைமாத கர்ப்பிணியான பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாவால் பாதிப்படைந்ததால் கோமா நிலைக்கு சென்று உள்ளார். அதன்பின் மேடிசன் நகரிலுள்ள எஸ்எஸ்எம் ஹெல்த் மருத்துவமனையில் […]
டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் தன்னுடன் அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க நாட்டில் ஸ்டீபனி பிரவுன் என்பவர் தனது குடும்பத்தாருடன் இணைந்து விடுமுறையை கழிப்பதற்காக வர்ஜினியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர் அங்குள்ள தேசிய பூங்கா அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவருடைய நான்கு வயது மகனான டோமினிக் தனது நாய் குட்டியுடன் சிறிது நேரம் சென்று விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது டோமினிக் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் குட்டி […]
மும்பையின் கவர்ச்சியான வாழ்க்கை முறையை கண்டு ஈர்க்கப்பட்டதால், வீட்டை ஓடிய 17 வயது சிறுமியை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள ஜமல்பூர் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு செல்வதற்காக பேருந்தில் பயணித்துள்ளார். ஜனவரி 18-ஆம் தேதி மும்பையில் இருந்து 35 கிலோன் மீட்டர் தூரத்தில் உள்ள தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் உள்ள ராஜ்மௌலி […]
5 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 123 காந்தாமணிகள். சீனாவில், 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருவரும் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மூழ்கி போன அந்த சிறுவன், தான் விளையாட்டு பொம்மையில் உள்ள காந்தமணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான். இதனையடுத்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம், விளையாட்டு பொம்மையில் இருந்த பந்தை தான் விழுங்கியதாக அவர்களிடம் கூறியுள்ளான். […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபருக்கு 6 குழந்தைகள் உள்ளதாம். உடன் பிறந்த சகோதரிகளை திருமணம் செய்துகொள்வதென்பதே இந்திய வளாகத்தில் சில சமுதாயத்தினர் தவிர யாரும் செய்துகொள்ளாத ஒன்று. ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் எனும் மாவட்டத்தில் வசிக்க கூடிய கிருஷ்ணா என்பவர் தன்னுடன் உடன் பிறந்த 3 சகோதரிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார். ஷோபா, ரினா […]
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சிறுவர்களின் ஆழ்துளை கிணறு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் நேற்று ஹரிகிருஷ்ணன் என்பவரால் அவரது வயலில் தோண்டப்பட்டிருந்த 200 அடி நீளமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் அவரது 4 வயது மகன் மூடப்பட்டிருந்த இரும்பு சட்டியை அகற்றி விளையாடிய போது எதிர்ப்பாராத விதமாக அதற்குள் தவறி விழுந்துவிட்டார். இந்நிலையில், தீயணைப்பு துறையினருக்கு இது […]
கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்த சிறுவன். நியூயார்க்கில் உள்ள மளிகைக்கடை ஒன்றில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வேடிக்கையான ஒரு விளையாட்டில் ஈடுபட்டார். அந்த விளையாட்டு என்னவென்றால், அந்த சிறுவனிடம் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் அளித்தால், அச்சிறுவனுக்கு கொடுக்கப்படும் ஐந்து வினாடிகளில், அவனுக்கு தேவையான பொருட்களை அந்த மளிகை கடையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இதனையடுத்து, அந்த சிறுவனிடம் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் சரியான பதில் அளித்துள்ளார். […]
குழந்தைகள் கொரோனா வைரஸை பரப்புகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படிதாராசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸானது, பிறந்த குழந்தைகள் முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வாராய் அனைவரையும் தாக்குகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா, நாத்தில் குழந்தைகள் இடையே கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறுகையில், 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது. […]
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இன்று பலரும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அலட்சியம் தான், ஒரு கட்டத்தில் பெரிய அளவிலான ஆபத்துகளை சந்திக்க வைக்கிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தையின் உணவுகுழாயிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அடுத்து உள்ள கொழுந்தம்பட்டு எனும் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் ஒரு வயது மகள் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இந்நிலையில் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் சென்றுள்ளனர். குழந்தையின் கழுத்து பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது உணவுக்குழாயில் அந்த ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். […]