வருகின்ற 19-ம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது.வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான […]