குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் வழங்கினார். குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்காக பாஜகவின் பூபேந்திர படேல் காந்திநகரில் உள்ள ராஜ்பவனுக்கு வந்து ஆளுநரிடம் தந்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா செய்துள்ள பூபேந்திர படேல் வரும் 12-ஆம் தேதி குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு பதிவு நேற்று […]
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே, முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை டெல்லி செல்ல முடியவில்லை. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. அது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் […]
நான் முதலமைச்சராக தொடர வேண்டாம் என விரும்பினால் நான் பதவி விலக தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வேளையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனிடையே, முதல்வர் உத்தவ் […]
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. […]
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதே மைதானத்தில் உபி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் யோகி ஆதித்யநாத். உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார் யோகி ஆதித்யநாத். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஆளுநர் ஆனந்தி பென படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லக்னோவில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இவ்விழாவில் உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக கேசவ் பிரசாத் […]
உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்த நிலையிலும், மீண்டும் முதல்வராக தேர்வு. நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களை பிடித்து பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத்தக்க வைத்தது. ஆனால், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி காதிமா தொகுதியில் தோல்வி அடைந்ததால் புதிய முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சராக […]
இன்று இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன். கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், இன்று கேரளாவில் பினராயி விஜயன் அவர்கள், முதல்வராக இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார். திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டரங்கில் இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வருடன் […]
தமிழகத்தின் முதல்வரானாலும் உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது என முக ஸ்டாலின் உருக்கம். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் பதவியேற்கவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைந்த அளவிலான நபர்கள் தான் இந்த விழாவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்துக்கு சென்று அவரது அறையில் முதல் கையெழுத்திட […]
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது எனக் கூறியுள்ளார். அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் பொது கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் […]
மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிப்பதாக போக்குவரத்து துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியின் மின்சார வாகனக் கொள்கையின் படி , பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு அளிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி அரசாங்கத்தின், மின்சார வாகனக் கொள்கையின் கீழ் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் மீதான சாலை வரி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக டெல்லி போக்குவரத்துத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பதிவு கட்டணம் […]
ஹரியானா மாநிலத்தில் வருகின்ற பரோடா சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை தோற்கடிக்க ஒரு சாதாரண பாஜக உறுப்பினரே போதும் என்று ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் இன்று தெரிவித்தார். அடுத்த மாத நடைபெறவுள்ள, பரோடா சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட ஹூடா துணிந்த சில நாட்களுக்குப் பிறகு கட்டார் இந்த கருத்துக்களை தெரிவித்தார். இதற்கிடையில், வருகின்ற நவம்பர் -3 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பரோடா சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரசும் […]
உலகம் முழுவதும் தற்போது லட்சக்கணக்கானோர் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையிலும் தன்னலம் பாராது மருத்துவர்கள் காவலர்கள் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து 400 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இது குறித்து அண்மையில் பேசிய மருத்துவர்கள் […]
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. இன்று அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் ஆகும்.இதனை கொண்டாட அதிமுக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதன் பின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகளை […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் 71 லட்சம் மரக்கன்று நாடும் விழாவை முதல்வர் தொடக்கி வைத்தார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயாலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா அதிமுக தலைமைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பிறந்தநாள் விழா_வை சிறப்பாக கொண்டாடினர்.அதோடு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியும் வெற்றி பெற வேண்டும் என்று சபதமும் எடுத்தனர். இதையடுத்து சென்னை கடற்கரை […]
மத்திய பட்ஜெட்டில் அறிவித்த 6000 ரூபாய்_யின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் விழா மத்திய அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு கவின் கலைக் கல்லூரிக்கு தமிழக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் படி முதல்தவனையாக 2000 ரூபாய் வழங்கும் விழா சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை […]
போக்குவரத்துத்துறை சார்பில் 140 கோடி ரூபாய் செலவில் 555 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டது. இந்த புதிய பேருந்துகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். சென்னைக்கு 56 பேருந்துகளும், மற்ற மண்டலங்களுக்கு 499 பேருந்துகளும் வழங்கப்பட்டன.புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேருந்துகளின் உள்ளே சென்றும் ஆய்வு நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்வருடன் மத்திய இணை பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் குறித்து மாநில தலைவர் முடிவெடுப்பார்.நாங்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி திட்டங்கள் குறித்து பேசினோம் என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கப்படுவதாகவும், 99 சதவீத வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு நடத்தப்பட்ட கஜா புயல் குறித்த விவாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்பொழுது, கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயாக நிவாரண நிதியை உயர்த்தி தர உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கஜா புயல் […]