டிச.17 முதல் ஜன.1 வரை, குளிர்கால விடுமுறையில் உச்ச நீதிமன்ற அமர்வு இருக்காது என தலைமை நீதிபதி அறிவிப்பு. உச்சநீதிமன்றத்துக்கு நாளை (டிசம்பர் 17) முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்மஸ் விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் சிறப்பு அமர்வு ஏதும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கூறியுள்ளார். இரண்டு வார குளிர்கால விடுமுறைக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள் இன்றுதான். மீண்டும் ஜனவரி […]
ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டாம் என பில்கிஸ் பானு வழக்கில் தலைமை நீதிபதி காட்டம். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பில்கிஸ் பானு வழக்கில் வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், தன் மீதான பாலியல் பலாத்கார […]
தெலுங்கானா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை. சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி முரளிதரனை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் […]
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி, உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் டி.ஒய்.சந்திரசூட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தலைமை […]
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் அறிவிப்பு. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக டி.ராஜா பணிபுரிந்து வரும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனிடையே, சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை […]
கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் இன்று தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்தார். தலைமை நீதிபதி அமர்வில் அளித்த மனுவில் ரத்தினம் உள்பட 70க்கும் மேற்பட்ட […]
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பேற்றார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்று கொண்டார். தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து துரைசாமி பதவியேற்று கொண்டார். உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற துரைசாமி செப்டம்பர் 21-ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக […]
ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி இன்று சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு அதன் புதிய தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகேஸ்வரி உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களின் நான்கு தலைமை நீதிபதிகளை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு எஸ்சி கல்லூரி சமீபத்தில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. முன்னோடியில்லாத வகையில், ஆந்திர மாநில முதல்வர், அக்டோபர் 6 ம் தேதி, இந்திய தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) எஸ் ஏ போப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார், ஜனநாயக […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலும் அரசு ஊழியர்களும், முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அவர்களுக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நல குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நீதிபதி ஏ.பி.சாஹி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா […]
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். வருகின்ற நவம்பர் 17-ஆம் தேதியுடன் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக ஏஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.நவம்பர் 18-ஆம் தேதி முறைப்படி பதவி ஏற்றுக்கொள்கிறார் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில் 2 . 7 ஏக்கர் நிலத்தை யாருக்கு தொந்தம் என பிரச்சினை இருந்து வருகின்றது. ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு சமமாக பிரித்துக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று முதல் விசாரணையை ஆரம்பித்தது.இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாபர் மசூதி வழக்கை 5 […]