குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி அவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை […]
தமிழக மக்க ளுக்குஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவிற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார். தமிழ்க மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல் , செல்வம், கல்வி இன்றியமையாதது.சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை கொண்டாடும் மக்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று சீரோடும் சிறப்போடு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். நாளை ஆயுதபூஜை தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் பணியின் போது கொரோனாத் தொற்றால் இன்னுயிர் நீத்த காவலர்களின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக “வீரக்காவலர்கள்” நினைவு கல்வெட்டை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். 1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர். காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் காவல் பணியாற்றும் […]
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க இன்று கொண்டாடப்படுகிறது.அதிமுக தொடங்கி 49 ஆண்டுகளை தொட்டுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு முதல்வர் பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கட்சியின் கொடியை முதல்வரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல மருத்துவர் திருவேங்கடம் நேற்று மரணம் அடைந்தார். தி.நகரில் தங்கி இருந்த திருவேங்கடம் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில், இவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், பிரபல மருத்துவர், மருத்துவ துறையில் பேராசிரியராக வும் பணியாற்றிய மருத்துவர் கே.வி திருவேங்கடம் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
இன்று கல்விகண் திறந்த கர்மவீரர் காமராஜர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று ஒவ்வொரு பிள்ளையும் கையில் ஏடு தூக்க காரணமாக இருந்தவர்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே தலைவர்களை உருவாக்கி தந்தவர். நாட்டிற்காக கண் துயில் கொள்ளமால் பல வருடங்கள் உண்மையாகவும், உன்னத மனிதராகவும், கடைசி காலக்கட்டத்தில் கூட நாட்டிற்காகவே உழைத்தவர் தனக்கென்று துணைக்கொண்டு வாழாமல் பாரதத்தை துணையாக கொண்டு வாழ்ந்த மாமனிதர். அரசியலில் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் கடைமையாற்றிய கருப்பு காந்தி.அவரை இன்னாளில் எல்லோரும் நினைவில் கொள்வோம். […]
சென்னையில் உள்ள 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார். தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருதை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார். அதில் மாநில நல்லாசிரியர் விருதிற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்கள் தேர்வாகி இருந்தனர். மேலும் சென்னையில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு மாநில […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். கடந்த 3-4 நாட்களாக சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக மீண்டும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை […]
சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சர்வதேச உடல் உறுப்பு தானம் என்பது மற்றவர்களின் உயிரை காப்பாற்ற தாமாக முன்வந்து தனது உடல் உறுப்புகளின் ஒரு பகுதியை கொடுத்து உதவும் நற்செயலாகும். மண்ணில் மங்கி போகும் உடல் ஒருவருக்காவது உதவும் என்றால் உலகில் இதைவிட பெரிய நற்செயல் எதுவும் இருக்காது. அந்த வகையில் சர்வதேச உடல் உறுப்பு தான […]
எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசுகையில், எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாலங்கள் அமைக்கப்படும்.சேலத்தில் சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்பட உள்ளது.கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு […]
நிலச்சரிவு தொடர்பாக கேரளா முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். இங்கு இருந்த 20 வீடுகளில் 80-க்கு மேற்பட்டோர் […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களை பொதுமக்கள் வாங்கும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் பலர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை என்று பல புகார்கள் எழுந்துள்ளது.இந்நிலையில் நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி புதிய […]
முதலமைச்சர் பழனிசாமி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100க்கு தொடர்பு கொண்டோ அல்லது எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட போது , இதற்கு பதிலளித்த […]
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று காலை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தற்போது தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது ,பேசிய முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் தற்போது புதியாக 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 50 -லிருந்து 67 […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை ஓமந்தூராரில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையினை சற்று மணி நேரத்திற்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடார். இங்கு கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 350 படுக்கைகள் உள்ளனர். இதையெடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கடந்த 19ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் சிக்கந்தர் பாஷா என்பவரை போலீஸ் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
1 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் செய்ய தமிழக அரசு ஒரு முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரையில் முதலமைச்சர் , அனைத்து அரசு நகராட்சி , மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்காக இந்த சட்டம் என்பது உருவாக்கப்பட்டதாகவும் , நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த சட்டம் வழிவகை செய்யும் அதற்க்கான முடிவினை […]
பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று தமிழத்தில் உள்ள அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார் . மேலும் நாளை சுய ஊரடங்கை முன்னிட்டு தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து இயங்காது , மெட்ரோ ரயில் ஓடாது எனவும் நேற்று அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக முதலமைச்சரிடம் பேசி உள்ளார். அப்போது தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகவும் , […]
அனைத்து கல்விநிறுவனங்கள் வருகின்ற 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு , +2 வகுப்பு தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அனைத்து விளையாட்டு அரங்கங்கள், கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் மார்ச் 31-ம் தேதி மூடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் […]
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கி கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொரோனாவால் நாளுக்கு நாள் […]