கர்நாடகம் : முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 2.45 மணியளவில் தன்னுடைய வீட்டில் காலமானார். அவர் இறந்ததை தொடர்ந்து அவருடைய இறப்புக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறுதிச்சடங்கு நாளை (11.12.2024) அரசு மரியாதையுடன், மத்தூர் தாலுகா, ஹூத்துரா, மாண்டியா மாவட்டம், சோமனஹள்ளி ஸ்வகிராமில் நடைபெறவுள்ளது. அங்கு அவருடைய உடல் தகனுமும் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அவருடைய மறைவை துக்க நிகழ்வாக அனுசரிக்கப்படவேண்டும் […]
கர்நாடக மாநில முதல்வரின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வரும் நவம்பர் 17 முதல் பட்டப்படிப்பு கல்லூரிகளை திறக்க முடிவு. மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல், பட்டைய மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று கர்நாடக துணைமுதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் நேரடியாக வகுப்புகளிளோ அல்லது ஆன்லைன் வகுப்புகளிலோ கலந்துகொள்ளலாம். நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகிய இரு விருப்பங்களையும் பயன்படுத்தி கலப்புமுறை கற்றலுக்கும் […]
கர்நாடகாவில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்விளைவாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக மைசூரு ,மங்களூரு.குடகு,உடுப்பி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக தற்போது வரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் தேசிய […]