பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

PTR: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்தே மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, அரசு சார்பில் சந்தித்து வரவேற்றதாக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின் போது மதுரை மாவட்டத்திற்கு வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று வரவேற்றார். இது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தப் … Read more

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

MK Stalin: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை தொடங்குகிறது. மாநிலம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. Read More – தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கனிமொழி … Read more

மக்களவை தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக..! மு.க ஸ்டாலின் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் திமுக தொடங்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திமுக, தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டின் … Read more

முதல்வர் வருகை..! திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை..!

முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆட்சி செய்யப்போவது திமுகதான்-முதல்வர் ஸ்டாலின்

திமுக முப்பெரும் விழா விருதுநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். அப்பொழுது பேசிய மு.க.ஸ்டாலின், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சி குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டால் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. உலக சுகாதார அமைப்பானது 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 800 மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு!!

‘மானவர் மனசு’ திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க, 800 மருத்துவர்களை நியமிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இத்திட்டம் விரைவில் முதலமைச்சரால் துவக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். “மாநிலம் முழுவதும் உள்ள 413 கல்வித் தொகுதிகளில் தலா இருவர் வீதம் 800 டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். படிப்பு, தொழில் மற்றும் நடத்தை மாற்றங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும்,” அமைச்சர் கூறினார். இளமைப் … Read more

சென்னைக்கு வருகை புரிந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு..!

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தமிழக தலைநகரமான சென்னைக்கு வந்துள்ளார். சிறப்பு விமானம் மூலமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.  இவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இவர் ஐ.ஐ.டி யில் நடைபெறவிருக்கும் விழாவில் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், நாளை மறுநாள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள புத்தக … Read more

கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறும். தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22,23-ம் தேதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு … Read more

#Breaking:”பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதிப்படி பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக 16 வது சட்டப்பேரவையின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.முதல் நாளன்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கி பல்வேறு திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்,விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,”மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு … Read more

#Breaking:2021-22ம் கல்வி ஆண்டுக்கான இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்..!

2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்கள் வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை பரவலானது தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.மேலும்,கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று வசதிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார். அந்த வகையில்,2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் விரைவில் … Read more