தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி முகாமை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி […]